Wednesday, June 10, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 14-06-2015

ஆண்டின் 11 ஞாயிறு

 


இன்றைய வாசகங்கள்:

 

திருப்பலி முன்னுரை: 

 

இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள். ஆண்டின் 11ஆம் ஞாயிறு. இன்றைய வாசகங்கள் அனைத்தும் இறைவனின் மாட்சிமையை நமக்கு எடுத்துக்கூறும் வகையில் அமைந்தது சிறப்பான ஒன்றாகும். இளங்கொழுந்து ஒன்றிலிருந்து பெரிய மரத்தை வளரச் செய்து அதன் நிழல்களில் பறவைகள் வந்து தங்கும்படி செய்கிறார் தந்தையாம் இறைவன். 

நாம் இவ்வுலகில் வாழ்ந்தாலும் கிறிஸ்துவின் நம்பிக்கையில் வாழ்கிறோம். கடுகு விதை சிறியதாக இருந்தாலும் பெரிய மரமாகிவிடுகிறது. விதைப்பவர் முயற்சி இல்லாமலே விதைகள் வளர்ந்து பலன் அளிக்கின்றன. இவ்வாறாக இறைவனின் திட்டம் அமையும் போது நாம் எவ்வாறு அவரின் திட்டத்தை நிறை வேற்றுகிறோம்?  கிறிஸ்துவின் நீதிமன்றத்தில் என்ன கைமாறு பெறுவோம்? என்ற சிந்தனையோடு திருப்பலியில் இணைந்திடுவோம். வாரீர் இறைக்குலமே!



வாசக முன்னுரை:

 

1.முதல் வாசகத்தில்  கடவுளின் நம்பிக்கை தரும் வாக்குறுதியை காண்போம். உயர்ந்த கேதுருமரத்தின் நுனி கிளையை எடுத்து இஸ்ராயேலின் உயர்ந்த மலை மீது நான் நடுவேன். அது சிறந்ததோர் மரமாக வியங்கும். அனைத்த பறவைகளும் அதனை உறைவிடமாக கொள்ளும் என்று இறைவன் எசேக்கியேல் இறைவாக்கினருக்கு கொடுத்த வாக்குறுதியை முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்.

 2.இரண்டாம்வாசகத்தில் நம்பிக்கையோடு வாழ்வோம் . உடல் அழிந்து கொண்டிருந்தாலும் நமது உள்ளார்ந்த  இயல்பு நாள்தோறும் புதுப்பிக்கப்பட வேண்டும். நமது உடல் அழிந்து போனாலும் கடவுள் நம்முள் வாழும் ஓரு கூடாரம். ஆன்மா நம்முள் உள்ளது. இவ்வுலக சுயநலன்களைன் பொருட்டு நம் ஆன்மா ஆண்டவரிமிருந்து பிரிக்கக் கூடும். நமது உடலில் மட்டுமன்று ஆன்மாவில் கிறஸ்து ஒருவரே நமக்கு நடுவராக இருந்து நாம் இவ்வுலகில் செய்த நன்மை தீமைகக்கு கைம்மாறு  பெற்றுக் கொள்ளுமாறு பனித பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் வலியுறுத்துகிறார்.



விசுவாசிகள் மன்றாட்டு:

 

திருச்சபைக்காக:

கடவுளின் நம்பிக்கை தரும் வாக்குறிதியாக திகழும் திருச்சபை கேதுருமரம் போல் தளிர்விட்டு  தழைத்து மேலோங்கிட இறைநம்பிக்கையால் தேர்ந்துக் கொள்ளப்பட்ட  திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவரது ஒளியில் மிளிரும் ஆயர்கள் குருக்கள் இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர். தாம் தேர்ந்து கொண்ட  அழைப்பிற்கேற்ற வாழ்க்கை வாழ வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.



நாட்டிற்காக:

 படைப்பாளரே எம் இறைவா எமது நாட்டு தலைவர்கள் குடிமக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும் மக்கள் மத்தியில் ஏற்படும் சலசலப்பில் மாறிடவும்  இயற்கையினால் ஏற்படும் பேரிடர்களை தாங்கிடவும் மென்மேலும் மக்களை நல்வழிபாதையில் அழைத்த சென்று சமத்துவம் காணும் மனதினை நாட்டை ஆளும் தலைவர்களுக்கு வழங்கிட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.


குடும்பங்களுக்காக:

நசரேத்தூர் திருக்குடும்பத்தை முன்னிறுத்தி ஆதிபெற்றோர் முதல் இன்றுவரை பல குடும்பங்களை உருவாக்கி மானிடரை வழி நடத்திய இறைவா! இன்றைய சூழலில் குடும்பங்கள் தோறும் அன்பெனும் உம் திருமகனின் கட்டளைபடி இறை - மனித -உறவில் நாளும் செழித்தோங்கிட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.


முதியோர்களுக்காக :

அன்பின் இறைவா! உம் மக்கள் இன்றைய சூழலில் வயது முதிர்ந்தவர்களை பேணி காக்கும் நிலைமாறி, முதியோர் இல்லங்கள் பெறுகிவரும் நிலையில் அவர்களுக்கு நீர் தந்தையாகவும், தாயாகவும் நின்று, தாங்கள் கடந்து வந்த பாதையைக் குறித்து அவர்கள் துன்புறும்  வேளையில் அவர்களுக்கு அன்பினை பொழிந்து அரவணைத்தும்  நல் ஆயனாக இருந்து வழி நடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.
 
எழுதியவர்: திருமதி அருள்சீலி அந்தோனி  

No comments:

Post a Comment