Sunday, May 24, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 31-05-2015

தமத்திரித்துவப் பெருவிழா.இன்றைய வாசகங்கள்:

 
 

திருப்பலி முன்னுரை: 

 

இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்று நமது தாய்திருச்சபை மூவொரு இறைவன் பெருவிழாவை கொண்டடி மகிழ்கின்றது. மூவொரு இறைவன் என்றால் தந்தை படைப்பாளராகவும், மகன் மீட்பராகவும், தூய ஆவி எந்நாளும் நம்மை பராமரிப்பவராகவும் நாம் விவிலியத்தின் அடிப்படையில் இம்மறைபொருளை உணர்கிறோம். அதன்படி வாழ்கின்றோம். மூவொரு கடவுளும் மூன்று கடவுளா? என்று சிலர் கேட்கலாம். ஆனால் படைத்தவர் தந்தை. அகரமும் னகரமும் நானே என்றவர் சுதன். நீரில் அசைவாடிக் கொண்டிருந்தவர் தூயஆவி.

மூவரும் ஒரே வல்லமை ஒரே இறைத்தன்மை கொண்டிருப்பதால் மூவரும் ஒரே கடவுளாக உள்ளனர். படைக்கப்பட்ட மானிடர் தவறும் போது தாயாகவும் தந்தையாகவும் உடன் பயணித்து மனித அவதாரம் பூண்டு மானிடரை மீட்கின்றார். பாடுகள் பலபட்டு மரித்து உயிர்த்து விண்ணகம் செல்லும் போது துணையாளரை அனுப்பி உலகம் இயங்கும் வரை உடன் பயணிப்பவரே தூயஆவியார். ஓரே கடவுள் மானிடருக்காக மூவொரு கடவுள் ஆனார். வாசக முன்னுரை:

 

1.முதல் வாசகத்தில் கடவுள் உலகில் மனிதரை படைத்த நாள் முதல் உலகின் ஒரு முனை முதல் மறுமுனை வரை நெருப்பின் நடுவே பேசிய கடவுள் நீங்கள் கண்டதுண்டா? சில அருங்குறிகள் வாயிலாக மக்களை வேறொரு நாட்டிற்கு அழைத்து வந்து உண்டா? என்ற இணையச்சட்ட நூலின் வாயிலாக 40 ஆண்டுகளின் பேரூரைகளை வாசிக்க கேட்போம். 

2.இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் உரோமை மக்களுக்கு "தூயஆவியால் நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளாக உள்ளோம்". அவரை "அப்பா தந்தை" என்று அழைக்கும் போது தூயஆவி நமக்காக சான்று பகர்கின்றார் என்று உணர்த்துகின்றார். எனவே நாமும் கிறிஸ்துவின் பங்காளிகள் என்பதை உணர்ந்து இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.


விசுவாசிகள் மன்றாட்டு1.திருஅவைக்காக…

 

வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்நாளில் உமது திருமகனின் அழைப்பை ஏற்று உமது திருச்சபையை ஆளும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர் தம் அழைப்பிற்கு ஏற்ப நற்செய்தியின் தூதுவர்களாக அவர்கள் வலம் வந்து கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

2. நாட்டிற்காக… 

 

கருணைக் கடலே எம் இறைவா! நாட்டை ஆளும் தலைவர்கள் அவரவர் இடத்தை பற்றிக் கொள்ள சுயநலத்தை நிலை நாட்டிக் கொள்ளாமல் உம் மக்களின் தேவைகளை உணர்ந்து பணி செய்யும் உத்வேகத்தை எம் நாட்டு தலைவர்களுக்கு வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

3.இயற்கை வளங்களுக்காக …

 

மனிதன் பாங்குடன் வாழ இயற்தையை படைத்து ஆளும் எம் இறைவா! எங்கு நோக்கினும் இயற்கையை அழித்து மனிதனுக்கு தேவையான காற்று நீர், நிலம், ஆகாயம், பூமி ஆகியவற்றை வீணடிக்கும் வீணர்களிடமிருந்து காத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

4.முதியோருக்காக…

 

விண்ணும் மண்ணும் அழிந்து போகும் என் வார்த்தைகள் ஒருபோதும் அழியாது என்று இயம்பிய எம் இறைவா முதியோர்களை உமது வார்த்தையால் வளமை படுத்தி சோர்ந்துபோகும் தருவாயில் உமது வாக்கு அவர்களுக்கு பாதுகாப்பாய் அமைந்திடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம். எழுதியவர்: திருமதி அருள்சீலி அந்தோனி

No comments:

Post a Comment