Saturday, May 23, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் மன்றாட்டுகளும். -24-05-2015


தூய ஆவியாரின் பெருவிழா

இன்றைய வாசகங்கள்:

திருப்பலி முன்னுரை: 

 

இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்றைய வழிபாடு நமக்கு உணர்த்தும் செய்தி கிறிஸ்துவின் விண்ணேற்றத்திற்கு பிறகு சோர்வுற்றிருந்த சீடர்களுக்கு "அஞ்சாதீர்கள். உங்களுக்கு துணையாளரை அனுப்புகிறேன். அவர் உங்களை உண்மையின் வழியில் வழி நடத்துவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது" என்னதே ! தூய ஆவியாரை நம்மில் பொழிந்து அருளடையாளங்கள் நிறைவு செய்யப்பட்டு இயங்குகின்றோம்.

தூய ஆவியார் துணையால் துணிவுடன் ஏழுச்சிப் பெற்றனர் சோர்ந்திருந்த திருத்தூதர்கள். தூய ஆவியார் ஒருவரே! செயல்பாடுகள் பல வகையுண்டு! கடவுள் ஒருவரே! இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை ஆழப்படுத்தி மானிடரை அன்புறவில் வாழ்ந்து வளர்ந்து ஒருவரை ஒருவர் அன்பு செய்து இறையனுபவத்தில் ஊன்றிட இன்றைய தூய ஆவியாரின் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது. 

வாசக முன்னுரை:

 

1.முதல் வாசகத்தில் தூயஆவியாரின் வருகை சீடர்கள் மீதும் அன்னை மரியாள் மீது பொழியப்பட்டு அனைவரையும் அக்னி நாக்குவடிவில் ஆவியார் இறங்கி பலரும் பல மொழிகளில் பேசியதையும் வந்தவர்கள் அவரவர்கள் மொழியில் கேட்டு பரவசம் அடைந்ததையும் தங்கள் சொந்த மொழியில் பேசியதை கேட்டு வியந்ததை குறித்துத் திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசிக்க கேட்போம். 

2.இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் கொரிந்து மக்களுக்கு தூயஆவியார் ஒருவரே செயல்பாடுகள் பல வகையுண்டு. கடவுள் உருவரே. ஆனால் சிலருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தையும், வேறுசிலருக்கு அறிவு செறிந்த சொல்வளத்தையும் வழங்குகிறார். அவரவர் தகுதிக்கு ஏற்ப அருள்வரங்களை வழங்குகிறார் என்ற சிந்தனைக்கு செவிமடுப்போம்.


விசுவாசிகள் மன்றாட்டு


1.திருஅவைக்காக…

துணையாளரை உங்களுக்கு அனுப்புகிறேன் என்று மொழிந்த எம் இயேசுவே உமது இறையரசை கட்டி எழுப்பும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள, குருக்கள், இருப்பதால் துறவியர், பொதுநிலையினர் அனைவரும் தாம் பெற்றுக் கொண்ட தூஆவியாரின் ஆற்றலுக்கேற்ப ஒரே சமத்துவ சமுதாயம் படைத்திட போதுமான தூயஆவியாரின் அருள்வரங்களை பொழிந்து வழிநடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

2. நாட்டிற்காக…

எல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக என்று மொழிந்த இயேசுவே எமது நாட்டுத் தலைவர்கள் சாதி - சமயம் - இனம் - மொழி கடந்து செயலாற்றவும், இறையரசை மண்ணக மாந்தர்கள் சுவைக்கும் வாய்ப்பை தலைவர்கள் வாயிலாக வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

3.அமைதிக்காக…

கருணை கடலே எம் இறைவா! எங்கு நோக்கினும் ஒரே குண்டு வெடிப்புகளும் - போரட்டங்களும், நிலநடுக்கங்களும் - வன்கொடுமைகள் - பாலியல் போன்ற கொடுமைகளால் பாதிக்கப்படும் உம் மக்களை உமது பாதம் அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்கு துணையாளரின் வழி நடத்துதல் தொடர்ந்து கிடைத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

4.மாணவ செல்வங்களுக்காக…

வெற்றி வேந்தனே எம்இறைவா! தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களை கிடைக்கப் பெற்று அதில் சாதனைப் படைத்திட துணையாரின் துணை வேண்டியும், அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டியும் இறைவா உமை மன்றாடுகின்றோம். 




எழுதியவர்: திருமதி அருள்சீலி அந்தோனி

No comments:

Post a Comment