Thursday, June 25, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 28-06-2015

ஆண்டின் 13 ஞாயிறு

இன்றைய நற்செய்தி:
முதலாம் வாசகம் சாலமோனின் ஞானம் 1:13-15,2:23-24 

இரண்டாம் வாசகம் 2 கொரி 8:7,9,13-15
நற்செய்தி மாற்கு 5:21-43 

திருப்பலி முன்னுரை:

 

இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்று நாம் ஆண்டின் 13ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்றோம். வழிபாடு என்பது திருச்சபையின் வழிபாடு. இங்கே கிறிஸ்துவின் மறையுடலில் சங்கமான நம் அனைவரையும் குருவானவர் இறை -மனித - உறவை இங்கே சங்கமிக்க செய்கிறார். இங்கே இறைமக்களின் வழிபாடு அரங்கேறுகிறது.

பணிவிடை பெறவதற்கு அல்ல! பணிவிடை புரியவே வந்தேன்! என்றவர் அவரது மீட்புபணியை அருட்தந்தையர்களை நாளும் நிறைவேற்ற தூய ஆவியாரின் வல்லமையால் நிரப்பி திருப்பலியை சிறப்புற மானிடரை அனைவரையும் பங்கெடுக்க செய்கிறார் என்ற சிந்தனையுடன் இன்றைய திருப்பலிக்கு குருவுடன் இணைந்து பங்கேற்போம். வாரீர் இறைகுலமே!


வாசக முன்னுரை:


முதல் வாசகத்தில்  நெறித்தவறிய வாழ்வால் சாவை வரவழைத்து கொள்ளாதீர்கள். சாவை கடவுள் உண்டாக்கவில்லை. உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை. கடவுள் மனிதரை அழியா வாழ்விற்காக படைத்தார். தன் சாயலில் படைத்தார் எனும் உண்மை  நெறிகளை சாலமோனின் ஞானநூலிருந்து வாசிக்க கேட்போம்.

இரண்டாம் வாசகத்தில் நம்பிக்கை, நாவண்மை, அறிவு பேரார்வம் அனைத்தையும் மிகுதியாக கொண்டுள்ள நீங்கள் அறப்பணியையும் மிகுதியாக செய்ய வேண்டுமென்று எல்லாரும் சமநிலையில் வாழவேண்டுமென்று  புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தை வாசிக்க கேட்போம்.

விசுவாசிகள் மன்றாட்டு:திருச்சபைக்காக:


பரம்பொருளே! எம் இறைவா! திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் ஒன்றிணைந்து ஒருமித்து இறைமகன் விட்டு சென்ற மீட்புபணியை செவ்வனே ஆற்றிட போதுமான வல்லமை இவர்களுக்கு பொழிந்து இயேசுவின் இறையரசு மண்ணகம் கண்டிட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.நாட்டிற்காக:


எமை படைத்துப் பராமரித்து ஆளும் எம் இறைவா! எமது நாட்டு அரசியல் பல நிலைகளில் பிளவுபட்டும், ஒருவர் மற்றவரைக் குறை கூறியும் வாழும் போக்கினை நன்கு அறிவீர். நீர் விரும்பிய ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனும் என்ற நிலை மேலோங்கி எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற உமது தாக்கம் எம் நாட்டு தலைவர்களிடையே மேலோங்கி நீவீர் விரும்பும் இறையரசு மலர்ந்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

மனித நேயம்  மண்ணில் மலர்ந்திட:


பண்பாளரே எம் இறைவா உம் திருமகன் வாழ்ந்த காலத்தில் இறை - மனித -உறவு நன்றாக அமைந்திட  சமுதாயத்திற்குள் ஊடுருவி மனிதனை மனிதனாக பாவிக்காது கல் நெஞ்ச யூதஇனத்திற்கு பல சவால்களால் சுட்டிகாட்டி மனித நேயம் மண்ணில் மலர்ந்திட அறச் செயல்களால் வாழ்ந்து காட்டி மானுடம் சிறந்து வாழ அறிவுறைகள் எமக்கு சுட்டிகாட்டி நாங்களும் அதன்படி இன்றைய  சூழலில் வாழ்ந்திட வரம் வேண்டி உமை மன்றாடுகிறோம்.

இளைய சமுதாயத்திற்காக :


இளைஞனே எழு! எழுந்து ஒளிவீசு என்ற எம் இறைவா! உமது பிள்ளைகள் எழுந்து ஒளிவிசிட பல தடைக்கற்கள்! மேற்கத்திய கலாச்சாரம், மின்னணு சாதனங்கள், நவீன தொலை தொடர்புகள் மேலோங்கி இளைஞர்கள் நிலை தடுமாறும் நிலை வளர்ந்தோங்கி உள்ளதை தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையானவற்றை கிரகித்து நேரிய இறையரசு பாதையில் பயணித்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

Friday, June 19, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 21-06-2015

ஆண்டின் 12 ஞாயிறுஇன்றைய வாசகங்கள்:

 

திருப்பலி முன்னுரை: 

இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே இன்று நாம் ஆண்டின் 12ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்றோம். ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர் என்று கருணையின் கடவுளை புகழ்வோம்.  ஏனெனில் மானுடத்தை படைத்து ஒவ்வொரு நொடியும் கண்ணின் இமை போல மனுக்குலத்தை காக்கின்றவர். தாயாக தந்தையாக நம்மை காத்து வருகின்றார்.

எனவே தான் இயேசு தம் மீட்பின் பணிகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரை வாயிலாக மனுகுலத்தை காத்திடும் செயல் வீரர்களாக பணியாளர்களாக திகழ மீட்பு சிந்தனைகளை மனதில் இறுத்தி இன்றைய வழிபாட்டிற்கு செவிமெடுப்போம்.  
வாசக முன்னுரை:


 முதல் வாசகத்தில் யோபுக்கு அருளிய பதில் கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஒடியபொழுது அதனைக் கதவிட்டு அடைத்தவர்கள் யார்? உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க என்று நான் இயம்பியபோது நீ எங்கிருந்தாய்? யோபு இறைவாக்கினருக்கு அளிக்கப்பட்ட செய்தியை முதல் வாசகத்தில் வாசிக்க கேட்போம்.

இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்துவின் பேரன்பே அனைவரையும் ஆட்கொண்டது. ஏனெனில் கிறிஸ்து அனைவருக்காக இறந்தார். ஒருவர் கிறிஸ்துவோடு ஒன்றிணைக்கப்பட்டு புதுப் படைப்பாக இருக்கிறார். பழையன கழிதலும் புதியன புதுதலும் என்ற புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தை வாசிக்க கேட்போம்.


விசுவாசிகள் மன்றாட்டு:

 

திருச்சபைக்காக:


பரம்பொருளே! எம் இறைவா திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் உமது இறையரசு பணியை செவ்வனே ஆற்றிட போதுமான ஆற்றல்களை அவர்கள் மீது பொழிந்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.


நாட்டிற்காக:


என் அன்பு தந்தையே இறைவா எம் நாட்டை ஆளும் தலைவர்கள் மனித நேயமிக்க நல்லாட்சி புரிந்து இறைமக்கள் அனைவரையும் சமத்துவத்துடனும் அன்புடனும் வழி நடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.


மக்களுக்காக:


உன்னதரே எம் இறைவா மனிதர்களாகிய நாங்கள் உணர்வற்று உறங்கும்போது தம் இதயத்தை இயக்குபவராகிய எம் இறைவா உம் மீது நம்பிக்கை கொண்டு வாழும்போது உம் திருமகன் படகில் உறங்கி கொண்டிருக்கும் போதும் மக்களை மீட்கிறவராக செயல் பட்டு கடலின் இறைச்சலை கடிந்து அமைதிபடுத்திய நிகழ்வு நாளும் எங்களுக்கு உற்சாகத்தைத்  தர வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.


நம்பிக்கையாளர்களுக்காக:


திடத்துடன் வாழும்  வாழும் திருச்சபையாக வாழ யோபுவின் துன்பங்களை நாங்களும் படித்துணர்ந்து, சோதனைகளில் துவண்டு போகமால் ஆழ்ந்த நம்பிக்கையில் வாழ்ந்த யோபுவை போன்று எமது திருச்சபை வாழ்ந்திட வரம் வேண்டி இறைவா உமைமன்றாடுகின்றோம்.


எழுதியவர்: திருமதி அருள்சீலி அந்தோனி  


Wednesday, June 10, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 14-06-2015

ஆண்டின் 11 ஞாயிறு

 


இன்றைய வாசகங்கள்:

 

திருப்பலி முன்னுரை: 

 

இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள். ஆண்டின் 11ஆம் ஞாயிறு. இன்றைய வாசகங்கள் அனைத்தும் இறைவனின் மாட்சிமையை நமக்கு எடுத்துக்கூறும் வகையில் அமைந்தது சிறப்பான ஒன்றாகும். இளங்கொழுந்து ஒன்றிலிருந்து பெரிய மரத்தை வளரச் செய்து அதன் நிழல்களில் பறவைகள் வந்து தங்கும்படி செய்கிறார் தந்தையாம் இறைவன். 

நாம் இவ்வுலகில் வாழ்ந்தாலும் கிறிஸ்துவின் நம்பிக்கையில் வாழ்கிறோம். கடுகு விதை சிறியதாக இருந்தாலும் பெரிய மரமாகிவிடுகிறது. விதைப்பவர் முயற்சி இல்லாமலே விதைகள் வளர்ந்து பலன் அளிக்கின்றன. இவ்வாறாக இறைவனின் திட்டம் அமையும் போது நாம் எவ்வாறு அவரின் திட்டத்தை நிறை வேற்றுகிறோம்?  கிறிஸ்துவின் நீதிமன்றத்தில் என்ன கைமாறு பெறுவோம்? என்ற சிந்தனையோடு திருப்பலியில் இணைந்திடுவோம். வாரீர் இறைக்குலமே!வாசக முன்னுரை:

 

1.முதல் வாசகத்தில்  கடவுளின் நம்பிக்கை தரும் வாக்குறுதியை காண்போம். உயர்ந்த கேதுருமரத்தின் நுனி கிளையை எடுத்து இஸ்ராயேலின் உயர்ந்த மலை மீது நான் நடுவேன். அது சிறந்ததோர் மரமாக வியங்கும். அனைத்த பறவைகளும் அதனை உறைவிடமாக கொள்ளும் என்று இறைவன் எசேக்கியேல் இறைவாக்கினருக்கு கொடுத்த வாக்குறுதியை முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்.

 2.இரண்டாம்வாசகத்தில் நம்பிக்கையோடு வாழ்வோம் . உடல் அழிந்து கொண்டிருந்தாலும் நமது உள்ளார்ந்த  இயல்பு நாள்தோறும் புதுப்பிக்கப்பட வேண்டும். நமது உடல் அழிந்து போனாலும் கடவுள் நம்முள் வாழும் ஓரு கூடாரம். ஆன்மா நம்முள் உள்ளது. இவ்வுலக சுயநலன்களைன் பொருட்டு நம் ஆன்மா ஆண்டவரிமிருந்து பிரிக்கக் கூடும். நமது உடலில் மட்டுமன்று ஆன்மாவில் கிறஸ்து ஒருவரே நமக்கு நடுவராக இருந்து நாம் இவ்வுலகில் செய்த நன்மை தீமைகக்கு கைம்மாறு  பெற்றுக் கொள்ளுமாறு பனித பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் வலியுறுத்துகிறார்.விசுவாசிகள் மன்றாட்டு:

 

திருச்சபைக்காக:

கடவுளின் நம்பிக்கை தரும் வாக்குறிதியாக திகழும் திருச்சபை கேதுருமரம் போல் தளிர்விட்டு  தழைத்து மேலோங்கிட இறைநம்பிக்கையால் தேர்ந்துக் கொள்ளப்பட்ட  திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவரது ஒளியில் மிளிரும் ஆயர்கள் குருக்கள் இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர். தாம் தேர்ந்து கொண்ட  அழைப்பிற்கேற்ற வாழ்க்கை வாழ வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.நாட்டிற்காக:

 படைப்பாளரே எம் இறைவா எமது நாட்டு தலைவர்கள் குடிமக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும் மக்கள் மத்தியில் ஏற்படும் சலசலப்பில் மாறிடவும்  இயற்கையினால் ஏற்படும் பேரிடர்களை தாங்கிடவும் மென்மேலும் மக்களை நல்வழிபாதையில் அழைத்த சென்று சமத்துவம் காணும் மனதினை நாட்டை ஆளும் தலைவர்களுக்கு வழங்கிட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.


குடும்பங்களுக்காக:

நசரேத்தூர் திருக்குடும்பத்தை முன்னிறுத்தி ஆதிபெற்றோர் முதல் இன்றுவரை பல குடும்பங்களை உருவாக்கி மானிடரை வழி நடத்திய இறைவா! இன்றைய சூழலில் குடும்பங்கள் தோறும் அன்பெனும் உம் திருமகனின் கட்டளைபடி இறை - மனித -உறவில் நாளும் செழித்தோங்கிட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.


முதியோர்களுக்காக :

அன்பின் இறைவா! உம் மக்கள் இன்றைய சூழலில் வயது முதிர்ந்தவர்களை பேணி காக்கும் நிலைமாறி, முதியோர் இல்லங்கள் பெறுகிவரும் நிலையில் அவர்களுக்கு நீர் தந்தையாகவும், தாயாகவும் நின்று, தாங்கள் கடந்து வந்த பாதையைக் குறித்து அவர்கள் துன்புறும்  வேளையில் அவர்களுக்கு அன்பினை பொழிந்து அரவணைத்தும்  நல் ஆயனாக இருந்து வழி நடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.
 
எழுதியவர்: திருமதி அருள்சீலி அந்தோனி  

Monday, June 1, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 07-06-2015


ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா

 

 இன்றைய வாசகங்கள்: 

 
திருப்பலி முன்னுரை: 


இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்று நாம் ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இன்றைய நாளில் கிறிஸ்து கூறிய வார்த்தைகளான "எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்." என்பதை நினைவு கூர்ந்திடுவோம். உலகில் உள்ள கத்தோலிக்கர் ஒவ்வொருவரும் தகுந்த ஆயத்தமுடன் திருவிருந்தில் பங்குபெறும்போது நம்மில் கிறிஸ்து வாழ்கின்றார் என்ற உண்மையின் உச்சக்கட்டமே இந்த திருவிருந்து ஆகும். 

இது என் உடல், இது என் இரத்தம் என்று அப்பரச வடிவில் நான் உம்மில் கலந்து விடுகின்றேன். நான் உம்மிலும், நீர் என்னிலும் இணைந்து உடன்பயணிக்கும் எங்களின் இவ்வுலக வாழ்வை ஒளிரச் செய்யும் உன்னதமான விருந்தே இன்றைய விழாவின் மையப்பொருள். அதனை உணர்ந்து இன்றைய வழிபாட்டில் கலந்து கொள்ள இப்பெருவிழாவில் நம்மை அழைக்கின்றது. வாரீர் இறைகுலமே!


வாசக முன்னுரை:

1.முதல் வாசகத்தில் மோசே மக்களிடம் ஆண்டவர் சொன்ன வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மலையடிவாதத்தில் பலிபீடம் அமைத்தார். இஸ்ரயேலின் இளைஞர்கள் எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலியாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர். பாதி இரத்தத்தை பலிபீடத்தின் மீதும், உடன்படிக்கையின் ஏட்டை மக்கள் கேட்கும்படி வாசித்தார். பின் இரத்தத்தை மக்களின் மீது தெளித்து ஆண்டவருடன் உடன்படிக்கைச் செய்தார். இதுவே ஆண்டவரின் உடன்படிக்கை என்பதை விடுதலைநூலிலிருந்து வாசிப்பக் கேட்போம்.2.
இரண்டாம் வாசகத்தில் மண்ணுலகிலும் விண்ணுலகிலும் நடக்கும் இறைவழிபாட்டிற்கு கிறிஸ்துவே தலைமைக் குரு. அவர் திருப்பலி செய்யும் கூடாரம் பெரியது. நிறைவு மிக்கது. அவர் பலியாகப் படைத்த இரத்தம் அவரது சொந்த இரத்தமே. அவரது தூய இரத்தத்தையே ஒரே ஒரு முறை சிந்தி மானிடரை மீட்டார் எனும் உன்னதமான இறைவழிபாடு பற்றி எபிரேயருக்கு எமுதப்பட்ட வாசகத்திலிருந்து கேட்போம்.

விசுவாசிகள் மன்றாட்டு:

 

திருச்சபைக்காக:

தன் உடலையே மானிடருக்காக பகிர்ந்தளித்த இயேசுவே! உமது அருட்சாதனைங்களை நிறைவேற்ற உம்மால் அழைப்பு  பெற்ற எம் திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினல்கள், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிரையினர் இனைவரும் உடன்படிக்கையின் படி வாழ்ந்தும் உமது மக்களை இறை  மனித  உறவில் நாளும் வழி நடத்த போதுமான ஆன்மா, உடல் நலன்களை வழங்கி அவர்களை வழி நடத்திட இயேசுவே உம்மை மன்றாடுகிறேம். 

நாட்டிற்காக:

 எமை படைத்து ஆளும் இறைவா, எமது நாட்டை ஆளும் தலைவர்கள் உம் திருமகனின் மனநிலையில் மக்களை வழி நடத்தவும் சுயநலத்தையும் அதிகாரத்தின் சுயநலபிடியிலிருந்து தளர்ந்து சமத்துவ சமுதாயம் படைத்திட வேண்டிய அருள் வரங்களை நிறைவாய் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மக்களுக்காக:

கருணை கடலே எம் இறைவா  உம் படைப்பின் மந்தையாகிய அனைவரும் சாதி சமயம் இனம் மொழி போன்ற பிளவுகளால் சிதறுண்டு தான் வணங்கும் தெய்வமே தெய்வம் என்று கடவுளையும் பிளவுபடுத்தும் நோக்கில் உள்ளம் சிதறுண்டு வேற்றுமை காணும் வேளையில் அவர்களுக்கு கடவுள் ஒருவரே . நாம் அனைவரும் ஒரே மேய்ப்பனின் ஆடுகள் என்ற மனநிலை மக்களிடையே மேலோங்கி நிற்கும் மனநிலை உருவாகிட வேண்டிய அருளை பொழிந்தருள இறைவா உமை மன்றாடுகிறோம்.


இளைய சமுதாயத்திற்காக:

சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். தடுக்காதீர்ககள் என்று மொழிந்த இயேசுவே சிறார் முதல் இளைஞர்கள் வரை உமது பொற்பாதங்களில் அர்ப்பணிக்கின்றோம். அவாகள் ஏறெடுக்கும் கல்வி மற்றும் கலாச்சாரம் நமது பண்பாட்டிற்கும் வாழ்க்கை தரத்திற்கும் ஏற்றதாகவும் பயிலும் மணாக்கர்கள் தங்கள் கல்வியை சிறந்த முறையில் கற்றிட வரம் வேண்டி இயேசுவே உமை மன்றாடுகிறோம்.எழுதியவர்: திருமதி அருள்சீலி அந்தோனி