Monday, June 1, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 07-06-2015


ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா

 

 இன்றைய வாசகங்கள்: 

 
திருப்பலி முன்னுரை: 


இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்று நாம் ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இன்றைய நாளில் கிறிஸ்து கூறிய வார்த்தைகளான "எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்." என்பதை நினைவு கூர்ந்திடுவோம். உலகில் உள்ள கத்தோலிக்கர் ஒவ்வொருவரும் தகுந்த ஆயத்தமுடன் திருவிருந்தில் பங்குபெறும்போது நம்மில் கிறிஸ்து வாழ்கின்றார் என்ற உண்மையின் உச்சக்கட்டமே இந்த திருவிருந்து ஆகும். 

இது என் உடல், இது என் இரத்தம் என்று அப்பரச வடிவில் நான் உம்மில் கலந்து விடுகின்றேன். நான் உம்மிலும், நீர் என்னிலும் இணைந்து உடன்பயணிக்கும் எங்களின் இவ்வுலக வாழ்வை ஒளிரச் செய்யும் உன்னதமான விருந்தே இன்றைய விழாவின் மையப்பொருள். அதனை உணர்ந்து இன்றைய வழிபாட்டில் கலந்து கொள்ள இப்பெருவிழாவில் நம்மை அழைக்கின்றது. வாரீர் இறைகுலமே!


வாசக முன்னுரை:

1.முதல் வாசகத்தில் மோசே மக்களிடம் ஆண்டவர் சொன்ன வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மலையடிவாதத்தில் பலிபீடம் அமைத்தார். இஸ்ரயேலின் இளைஞர்கள் எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலியாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர். பாதி இரத்தத்தை பலிபீடத்தின் மீதும், உடன்படிக்கையின் ஏட்டை மக்கள் கேட்கும்படி வாசித்தார். பின் இரத்தத்தை மக்களின் மீது தெளித்து ஆண்டவருடன் உடன்படிக்கைச் செய்தார். இதுவே ஆண்டவரின் உடன்படிக்கை என்பதை விடுதலைநூலிலிருந்து வாசிப்பக் கேட்போம்.2.
இரண்டாம் வாசகத்தில் மண்ணுலகிலும் விண்ணுலகிலும் நடக்கும் இறைவழிபாட்டிற்கு கிறிஸ்துவே தலைமைக் குரு. அவர் திருப்பலி செய்யும் கூடாரம் பெரியது. நிறைவு மிக்கது. அவர் பலியாகப் படைத்த இரத்தம் அவரது சொந்த இரத்தமே. அவரது தூய இரத்தத்தையே ஒரே ஒரு முறை சிந்தி மானிடரை மீட்டார் எனும் உன்னதமான இறைவழிபாடு பற்றி எபிரேயருக்கு எமுதப்பட்ட வாசகத்திலிருந்து கேட்போம்.

விசுவாசிகள் மன்றாட்டு:

 

திருச்சபைக்காக:

தன் உடலையே மானிடருக்காக பகிர்ந்தளித்த இயேசுவே! உமது அருட்சாதனைங்களை நிறைவேற்ற உம்மால் அழைப்பு  பெற்ற எம் திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினல்கள், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிரையினர் இனைவரும் உடன்படிக்கையின் படி வாழ்ந்தும் உமது மக்களை இறை  மனித  உறவில் நாளும் வழி நடத்த போதுமான ஆன்மா, உடல் நலன்களை வழங்கி அவர்களை வழி நடத்திட இயேசுவே உம்மை மன்றாடுகிறேம். 

நாட்டிற்காக:

 எமை படைத்து ஆளும் இறைவா, எமது நாட்டை ஆளும் தலைவர்கள் உம் திருமகனின் மனநிலையில் மக்களை வழி நடத்தவும் சுயநலத்தையும் அதிகாரத்தின் சுயநலபிடியிலிருந்து தளர்ந்து சமத்துவ சமுதாயம் படைத்திட வேண்டிய அருள் வரங்களை நிறைவாய் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மக்களுக்காக:

கருணை கடலே எம் இறைவா  உம் படைப்பின் மந்தையாகிய அனைவரும் சாதி சமயம் இனம் மொழி போன்ற பிளவுகளால் சிதறுண்டு தான் வணங்கும் தெய்வமே தெய்வம் என்று கடவுளையும் பிளவுபடுத்தும் நோக்கில் உள்ளம் சிதறுண்டு வேற்றுமை காணும் வேளையில் அவர்களுக்கு கடவுள் ஒருவரே . நாம் அனைவரும் ஒரே மேய்ப்பனின் ஆடுகள் என்ற மனநிலை மக்களிடையே மேலோங்கி நிற்கும் மனநிலை உருவாகிட வேண்டிய அருளை பொழிந்தருள இறைவா உமை மன்றாடுகிறோம்.


இளைய சமுதாயத்திற்காக:

சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். தடுக்காதீர்ககள் என்று மொழிந்த இயேசுவே சிறார் முதல் இளைஞர்கள் வரை உமது பொற்பாதங்களில் அர்ப்பணிக்கின்றோம். அவாகள் ஏறெடுக்கும் கல்வி மற்றும் கலாச்சாரம் நமது பண்பாட்டிற்கும் வாழ்க்கை தரத்திற்கும் ஏற்றதாகவும் பயிலும் மணாக்கர்கள் தங்கள் கல்வியை சிறந்த முறையில் கற்றிட வரம் வேண்டி இயேசுவே உமை மன்றாடுகிறோம்.எழுதியவர்: திருமதி அருள்சீலி அந்தோனி 

No comments:

Post a Comment