Thursday, June 25, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 28-06-2015

ஆண்டின் 13 ஞாயிறு





இன்றைய நற்செய்தி:
முதலாம் வாசகம் சாலமோனின் ஞானம் 1:13-15,2:23-24 

இரண்டாம் வாசகம் 2 கொரி 8:7,9,13-15
நற்செய்தி மாற்கு 5:21-43 

திருப்பலி முன்னுரை:

 

இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்று நாம் ஆண்டின் 13ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்றோம். வழிபாடு என்பது திருச்சபையின் வழிபாடு. இங்கே கிறிஸ்துவின் மறையுடலில் சங்கமான நம் அனைவரையும் குருவானவர் இறை -மனித - உறவை இங்கே சங்கமிக்க செய்கிறார். இங்கே இறைமக்களின் வழிபாடு அரங்கேறுகிறது.

பணிவிடை பெறவதற்கு அல்ல! பணிவிடை புரியவே வந்தேன்! என்றவர் அவரது மீட்புபணியை அருட்தந்தையர்களை நாளும் நிறைவேற்ற தூய ஆவியாரின் வல்லமையால் நிரப்பி திருப்பலியை சிறப்புற மானிடரை அனைவரையும் பங்கெடுக்க செய்கிறார் என்ற சிந்தனையுடன் இன்றைய திருப்பலிக்கு குருவுடன் இணைந்து பங்கேற்போம். வாரீர் இறைகுலமே!


வாசக முன்னுரை:


முதல் வாசகத்தில்  நெறித்தவறிய வாழ்வால் சாவை வரவழைத்து கொள்ளாதீர்கள். சாவை கடவுள் உண்டாக்கவில்லை. உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை. கடவுள் மனிதரை அழியா வாழ்விற்காக படைத்தார். தன் சாயலில் படைத்தார் எனும் உண்மை  நெறிகளை சாலமோனின் ஞானநூலிருந்து வாசிக்க கேட்போம்.

இரண்டாம் வாசகத்தில் நம்பிக்கை, நாவண்மை, அறிவு பேரார்வம் அனைத்தையும் மிகுதியாக கொண்டுள்ள நீங்கள் அறப்பணியையும் மிகுதியாக செய்ய வேண்டுமென்று எல்லாரும் சமநிலையில் வாழவேண்டுமென்று  புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தை வாசிக்க கேட்போம்.

விசுவாசிகள் மன்றாட்டு:



திருச்சபைக்காக:


பரம்பொருளே! எம் இறைவா! திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் ஒன்றிணைந்து ஒருமித்து இறைமகன் விட்டு சென்ற மீட்புபணியை செவ்வனே ஆற்றிட போதுமான வல்லமை இவர்களுக்கு பொழிந்து இயேசுவின் இறையரசு மண்ணகம் கண்டிட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.



நாட்டிற்காக:


எமை படைத்துப் பராமரித்து ஆளும் எம் இறைவா! எமது நாட்டு அரசியல் பல நிலைகளில் பிளவுபட்டும், ஒருவர் மற்றவரைக் குறை கூறியும் வாழும் போக்கினை நன்கு அறிவீர். நீர் விரும்பிய ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனும் என்ற நிலை மேலோங்கி எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற உமது தாக்கம் எம் நாட்டு தலைவர்களிடையே மேலோங்கி நீவீர் விரும்பும் இறையரசு மலர்ந்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

மனித நேயம்  மண்ணில் மலர்ந்திட:


பண்பாளரே எம் இறைவா உம் திருமகன் வாழ்ந்த காலத்தில் இறை - மனித -உறவு நன்றாக அமைந்திட  சமுதாயத்திற்குள் ஊடுருவி மனிதனை மனிதனாக பாவிக்காது கல் நெஞ்ச யூதஇனத்திற்கு பல சவால்களால் சுட்டிகாட்டி மனித நேயம் மண்ணில் மலர்ந்திட அறச் செயல்களால் வாழ்ந்து காட்டி மானுடம் சிறந்து வாழ அறிவுறைகள் எமக்கு சுட்டிகாட்டி நாங்களும் அதன்படி இன்றைய  சூழலில் வாழ்ந்திட வரம் வேண்டி உமை மன்றாடுகிறோம்.

இளைய சமுதாயத்திற்காக :


இளைஞனே எழு! எழுந்து ஒளிவீசு என்ற எம் இறைவா! உமது பிள்ளைகள் எழுந்து ஒளிவிசிட பல தடைக்கற்கள்! மேற்கத்திய கலாச்சாரம், மின்னணு சாதனங்கள், நவீன தொலை தொடர்புகள் மேலோங்கி இளைஞர்கள் நிலை தடுமாறும் நிலை வளர்ந்தோங்கி உள்ளதை தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையானவற்றை கிரகித்து நேரிய இறையரசு பாதையில் பயணித்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment