Friday, June 19, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 21-06-2015

ஆண்டின் 12 ஞாயிறு



இன்றைய வாசகங்கள்:

 

திருப்பலி முன்னுரை: 

இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே இன்று நாம் ஆண்டின் 12ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்றோம். ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர் என்று கருணையின் கடவுளை புகழ்வோம்.  ஏனெனில் மானுடத்தை படைத்து ஒவ்வொரு நொடியும் கண்ணின் இமை போல மனுக்குலத்தை காக்கின்றவர். தாயாக தந்தையாக நம்மை காத்து வருகின்றார்.

எனவே தான் இயேசு தம் மீட்பின் பணிகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரை வாயிலாக மனுகுலத்தை காத்திடும் செயல் வீரர்களாக பணியாளர்களாக திகழ மீட்பு சிந்தனைகளை மனதில் இறுத்தி இன்றைய வழிபாட்டிற்கு செவிமெடுப்போம்.  




வாசக முன்னுரை:


 முதல் வாசகத்தில் யோபுக்கு அருளிய பதில் கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஒடியபொழுது அதனைக் கதவிட்டு அடைத்தவர்கள் யார்? உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க என்று நான் இயம்பியபோது நீ எங்கிருந்தாய்? யோபு இறைவாக்கினருக்கு அளிக்கப்பட்ட செய்தியை முதல் வாசகத்தில் வாசிக்க கேட்போம்.

இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்துவின் பேரன்பே அனைவரையும் ஆட்கொண்டது. ஏனெனில் கிறிஸ்து அனைவருக்காக இறந்தார். ஒருவர் கிறிஸ்துவோடு ஒன்றிணைக்கப்பட்டு புதுப் படைப்பாக இருக்கிறார். பழையன கழிதலும் புதியன புதுதலும் என்ற புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தை வாசிக்க கேட்போம்.


விசுவாசிகள் மன்றாட்டு:

 

திருச்சபைக்காக:


பரம்பொருளே! எம் இறைவா திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் உமது இறையரசு பணியை செவ்வனே ஆற்றிட போதுமான ஆற்றல்களை அவர்கள் மீது பொழிந்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.


நாட்டிற்காக:


என் அன்பு தந்தையே இறைவா எம் நாட்டை ஆளும் தலைவர்கள் மனித நேயமிக்க நல்லாட்சி புரிந்து இறைமக்கள் அனைவரையும் சமத்துவத்துடனும் அன்புடனும் வழி நடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.


மக்களுக்காக:


உன்னதரே எம் இறைவா மனிதர்களாகிய நாங்கள் உணர்வற்று உறங்கும்போது தம் இதயத்தை இயக்குபவராகிய எம் இறைவா உம் மீது நம்பிக்கை கொண்டு வாழும்போது உம் திருமகன் படகில் உறங்கி கொண்டிருக்கும் போதும் மக்களை மீட்கிறவராக செயல் பட்டு கடலின் இறைச்சலை கடிந்து அமைதிபடுத்திய நிகழ்வு நாளும் எங்களுக்கு உற்சாகத்தைத்  தர வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.


நம்பிக்கையாளர்களுக்காக:


திடத்துடன் வாழும்  வாழும் திருச்சபையாக வாழ யோபுவின் துன்பங்களை நாங்களும் படித்துணர்ந்து, சோதனைகளில் துவண்டு போகமால் ஆழ்ந்த நம்பிக்கையில் வாழ்ந்த யோபுவை போன்று எமது திருச்சபை வாழ்ந்திட வரம் வேண்டி இறைவா உமைமன்றாடுகின்றோம்.


எழுதியவர்: திருமதி அருள்சீலி அந்தோனி  


No comments:

Post a Comment