Friday, July 3, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 05-07-2015

 

ஆண்டின் 14 ஞாயிறு

 

இன்றைய நற்செய்தி:

முதலாம் வாசகம் 1 எசேக்கியேல் 2:2-5
இரண்டாம் வாசகம் 2 கொரி 12:7-10
நற்செய்தி மாற்கு 6:1-6


திருப்பலி முன்னுரை:

 

இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்று நாம் ஆண்டின் 14ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்றோம். இறைவிருப்பத்திற்கு எதிராக மனிதன் மாறும் போது அழிந்துவிடுகிறான். மாறக ஏற்றுக்கொள்ளும்போது புதுவாழ்வு
அடைகிறான். இதனையே பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் காணலாம். இன்றும் அதே அழைப்பையே தருகிறார் இறைவன்.

நம்மில் இருக்கும் இறுமாப்பு களையப்படவேண்டும். இது சாத்தன் அனுப்பிய ஒரு குறையாகவே இருக்கிறது. இந்த இறுமாப்பு தான் இயேசுவை ஏற்க மறுக்கவைக்கிறது. நமது மனதிலுள்ள இறுமாப்பு களைப்பட்டு இறை அருள் மட்டுமே போதும் என்ற மனநிறைழய ஏற்றுக்க்கொள்ள முழு மனதுடன் இப்பலியில் பங்கேற்ப்போம்.

வாசக முன்னுரை:


முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் யாவே கடவுளை மறந்து மறுத்த போதொல்லாம் இறைவாக்கினாகளால்  எச்சரிக்கப்படுகிறார்கள். அதையும் மீறும் போது அழிக்கப்படுகிறார்கள். எல்லாம் இழந்து அடிமைகளாக மாற்றப்படுகிறார்கள். உள்ளத்தில் உறைந்துபோய்க்கிடக்கும் ஒரு மக்களினத்திற்கு உயிர்கொடுக்க இறைவாக்கினரை எசேக்கியேலை 
அழைக்கின்றார் இறைவன். இறைவனின் அழைப்பிற்கு இவ்வாசத்தின் மூலம் செவிமேடுப்போம்.இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதிய திருமடலில் நன்றாக தன் மனம் திறந்து பேசுகிறார். ஏறக்குறைய திருமடல் நிறைவுறும் நேரத்தில் தன்னிடமிருக்கும் வலுவின்மைபற்றி அவர் பெருமை பேசுவதே அதன் சிறப்பு.  முள் ஒன்று தைத்து வலி ஏற்பட்டுள்ளது. கடவுளின் அருள் மட்டுமே தனக்குப் போதும். வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன் என்று சான்றுபகரும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் கேட்டு மனதில் இருத்திக்கொள்வோம்.

 

விசுவாசிகள் மன்றாட்டு:திருச்சபைக்காக:


ஆளும் வல்லவரே! எம் இறைவா! திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ்,  ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் ஒன்றிணைந்து உம் பணியாற்றவும், ஒருவர் ஒருவரை மதித்து  ஏற்றுக்கொண்டு உம் சாட்சிகளாக இவ்வுலகில் வாழ்ந்திட  வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.


நாட்டிற்காக:

எமை ஆளும் எல்லாம் வல்ல இறைவா! எமது நாட்டு அரசியலில் ஏற்றப்பட்டுள்ள பிரிவுகள் எல்லாம் நீங்கி எல்லாத்  தலைவர்களும் மக்களின் நலனில் கவனம் செலுத்தவும், நாட்டின் எல்லா வளங்களும் பேணிக்காக்கப் படவும்   எம் நாட்டு தலைவர்கள் மக்களுக்காக தன்னலமற்று உழைத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

குடும்பங்களுக்காக:


திருக்குடும்பத்தின் வழியாக அதன் பெருமைகளை எடுத்துக்காட்டிய இறைவா, எங்கள் குடும்பங்களும் சிறு வட்டத்தில் நின்று விடாமல் பெற்றோர்கள் பிள்ளைகள் அனைவரும் உம் அருள் ஒன்றே போதும் என்பதற்கு சாட்சியாக இச்சமுதாயத்தில் வலம் வரவும், தங்கள் வலுவின்மைகளை புரிந்து கொண்டு அதுவே தம் பலம் உணர்ந்து வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உலகிற்காக:


உம்மை தங்கள் சொந்த மீட்பராக ஏற்று வாழ்வோருக்கு ஏற்படும் இன்னல்களை நீர் அறிவீர். அவர்கள் வாழ்விடம் இழந்து சொந்தகளையும் இழந்து தவிக்கும் போது அவர்களின் ஆறுதலாகவும் அவற்றை வெற்றிக்கொள்ள துணையாகவும் இருந்திட  வேண்டி, இறைவா உமை மன்றாடுகின்றோம்.
எழுதியவர்: திருமதி அருள்சீலி அந்தோனி  

No comments:

Post a Comment