பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
எசாயா 66: 18-21
எபிரேயர் 12:5-7,11-13
லூக்கா 13: 22-30
திருப்பலி முன்னுரை:
இறைமகன் இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டு, நிறைவாழ்வை நோக்கி வெற்றி நடைபோடும் இறைகுலமே! பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகின்றோம்.
வாழ்வுக்குச் செல்லும் வழிக் குறுகலானது. ஆனால் அழிவுக்குச் செல்லும் வழியோ அகலமானது. நம்மில் எத்தனையோ பேர் வாழ்க்கைப் போராட்டத்தில் துவண்டு விடாமல் இறுதிரைப் போராடி நம் வாழ்வில் வெற்றிப் பெறுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
எசாயா இறைவாக்கினர் கலக்கமுற்றுக் கவலையில் இருந்த மக்களை நம்பிக்கையில் தேற்றுவதை நாம் காணலாம். இறையாட்சியில் நுழைவதற்கும் நம் வாழ்வில் நம்பிக்கை என்னும் நங்கூரம் அவசியமானது. ஆண்டவரின் கண்டிப்பால் திருந்தியவர்கள் துயரத்திற்கு உள்ளனாலும் பின்பு அவர்கள் அமைதியும், நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர்.
இடுக்கலான வழி நீதியின் வழி, அமைதியின் வழி, மகிழ்ச்சியின் வழி. இடுக்கலான வாயில் வழியே நுழைவோர் நிலைவாழ்வைப் பெறுவர். இதை மேற்கொள்பவர்கள் வெகுசிலரே. அந்த வெகுசிலராகிய நாம் இறைமகன் இயேசுவில் நம்பிக்கை வைத்து அர்ப்பணவாழ்வு வாழ இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...
வாசகமுன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
பாபிலோனியாவிற்கு அடிமைகளாக நாடு கடத்தப்பட்டவர்கள் திரும்புவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கும் எசாயா, தொடர்ந்து, பிற இனத்தவரும் இஸ்ரயேலின் மாட்சி நோக்கி வருவர் என்று இறைவாக்கு உரைக்கின்றார். எருசலேமின் கதவுகள் பிற இனத்தாருக்கும் திறந்துவிடப்படுகின்றன. உள்ளே நுழையும் அவர்கள் இறைவனின் மாட்சிமையை உணர்ந்து கொள்வார்கள். இறைவனின் மேய்ச்சல் நிலத்தைக் கண்டு கொள்வார்கள். இறைவன் அவர்களின் உரிமைச்சொத்தாகவும் மாறுவார் என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப்பாடல்
திருப்பாடல் 117: 1. 2
பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி
ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி
இரண்டாம் முதல் வாசக முன்னுரை:
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து நாம் வாசிக்கக் கேட்கவுள்ள இன்றைய இரண்டாம் வாசகம் துன்பத்தின் முக்கியத்துவத்தையே மையப்படுத்திறது. 'கடவுளை' தந்தையாகவும், 'நம் அனைவரையும்' பிள்ளைகள் எனவும் உருவகிக்கும் ஆசிரியர், மகனைக் கண்டித்துத் திருத்தாத தந்தை உண்டோ என்று கேட்கின்றார். ஆக, நம் துன்பங்கள் எல்லாம் நம்மைக் கண்டித்துத் திருத்தவும், நம்மை நல்வழிப்படுத்தவதற்கே என்ற ஆசிரியர் திருத்தூதர் பவுலின் அறிவுரையாகிய இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
1. வாழ்வும் வழியுமான எம் இறைவா! உம் வார்த்தையை நம்பி அதனை வாழ்வாக்கிடத் திரு அவை தன் சொல்லாலும் செயலாலும் உம் வார்த்தையின் அடிச்சுவடுகளுக்கு ஏற்ப இறைமக்களை நேரியப் பாதையில் வழி நடத்திச் செல்லத் தேவையான இறை அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2 ஒளியின் நாயகனே! எம் இறைவா! எம்நாட்டுத் தலைவர்கள் மக்களை அடக்கி ஒடுக்கி ஏழைப் பணக்காரன் என்ற பாகுபாடுகளைக் களைந்து எல்லோரும் சமம் என்று மாண்பிலும் மகத்துவத்திலும் சிறந்து விளங்கிட உம் பாதை அவர்களுக்கு வழியும் ஒளியுமாக இருந்து செயல்படத் தேவையான ஞானத்தை நிறைவாய் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நீதியின் நாயகனே எம் இறைவா! நீர் கண்டித்துத் திருந்தும் மனிதர் பேறுபெற்றவர் என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப எம் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் தங்கள் சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவுக்கும் சமூகத்திற்கும் மாண்புள்ளவர்களாக வாழ்ந்து, நீர் கண்டித்தும் திருத்தும்போது, அதை ஏற்றுக் கொண்டு தளர்ந்து போகாமல் வாழ்ந்திட வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. படைப்பிற்கெல்லாம் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்று கூறிய எம் இறைவா! இன்றைய சூழலில் கிறிஸ்தவத்திற்கு எதிராக எழுப்பப்படும் பரிவினைகள், திவிரவாதம் வன்முறை கலச்சாரம் இவற்றின் பிடிலிருந்து திருச்சபையைக் காப்பற்றி உமக்கு எதிராகச் செயல்படும் மனிதர்கள் தங்கள் அறியாமையை மறந்து உண்மைக் கடவுளை ஏற்றுக் கொண்டு உம் பணி ஆற்றிட தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. ஏழைகளுக்கும் நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு என்று அருள் தரும் விவிலிய வார்த்தைக்கு ஏற்ப எம்நாட்டில் நிலவும் ஏழ்மை, வறுமை, பசி, பட்னி வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி, வியாபர மயமாக்குதல் போன்றவைகளை நீர் கண்ணோக்கி ஏழைகளின் வாழ்வு வளம்பெறத் தேவைகளை உணர்ந்துச் சந்தித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment