Friday, June 16, 2023

பொதுக்காலம் 11ஆம் வாரம் - ஞாயிறு - 18-06-2023

 பொதுக்காலம் 11ஆம் வாரம் - ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகம்

விடுதலைப் பயணம் 19: 2-6a
உரோமையர் 5: 6-11
மத்தேயு 9: 36- 10: 8

திருப்பலி முன்னுரை

அன்பு இறைமக்களே,
பொதுக்காலம் 11 ஆம் ஞாயிறு திருப்பலிக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைமகன் இயேசுகிறிஸ்துவின் இனிய பெயரால் அன்பு வாழ்த்துக்கள்! இன்றைய நற்செய்தி பகுதி சீடத்துவத்தைப்ிறது. இயேசு முதல் பன்னிரண்டு திருத்தூதர்களை அழைத்து அனுப்பியது போல், அவர் நம்மையும் ஒரு பணிக்காக அழைத்து அனுப்புகிறார். சீடத்துவம் ஒரு பணியை உள்ளடக்கியது. உதவிகளுக்காகத் தேவைப்படுவோர் ஏராளம் என்பத அன்றும் இன்றும் என்றும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை இனம் கண்டு உதவும் ஆட்களோ குறைவு. இன்றைய நற்செய்தியில், இயேசு மக்களின் தேவையை அறிந்து எவ்வாறு அவர்கள்மீது பரிவு கொண்டார் என்பதை காட்டுகிறது. இன்றைய நற்செய்தியில் கூட ஆயன் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டவர்கள் நடுவில்தான் இயேசுவை நாம் காண்கின்றோம். "அறுவடை தயாராக உள்ளது, ஆனால் வேலையாட்கள் குறைவாக" என்று நல்மேய்ப்பனாம் இயேசு நம் அனைவரையும் அழைக்கின்றார் இறையரசை அறிவிக்க... குருக்களுடன் இணைந்து செயல்பட அழைக்கின்றார். இணைந்து செயல்படுவோம்… இறையரசை அறிவிக்க...


முதல் வாசக முன்னுரை:

கடவுள் ஏழை மக்களுக்காக எகிப்து நாட்டை, பார்வோனை எதிர்த்ததை நாம் அறிவோம். நீங்கள் எனக்குச் செவிசாய்த்து, என் உடன்படிக்கயை கடைப்பிடித்தால் மற்றெல்லா மக்களையும் விட, இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் எனக்குத் தனி சொத்தாக இருப்பீர்கள் என்ற கூறும் கடவுளின் உறுதிமொழியை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கேட்டுத் தியானிப்போம்.  

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 3c)
பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
1. அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

2. ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

3. ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

நல்லவர் ஒருவருக்காக உயிரைத் தருவது என்பதே அரிதான செயல்லாக இருக்க, பாவிகளான நமக்காக இறைமகன் இயேசு தம் உயிரையே அளித்து நம்மைக் கடவுளுக்கு ஏற்புடையவராக மாற்றியிருக்கிறார் என்ற வார்த்தைகளை நம் உள்ளத்தின் ஆழத்தில் பதித்து செயல்பட அழைக்கும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1.அறுவடையின் நாயகனே! எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர் இறை நம்பிக்கை மிகுந்தவராகவும், விவேகமுடையவராகவும் செயல்படவும், இழப்புகளே மகிழ்ச்சி என்று அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும், அறுவடைக்காகச் சிறப்பாக உழைக்கத் தேவையான ஞானத்தையும் உடல் நலத்தையும் நிறைவாய் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்களை வளமான உமது நிறைவாழ்வுக்கு இட்டுச் செல்லும் இறைவா! எங்கள் குடும்பங்கள் பவுலடியார் கூறிப்படி இயேசுவின் சிலுவையின்றி வேறெதிலும் ஒரு காலும் பெருமை பாராட்டாமல் இயேசுவின் அடிமைகளாக வாழவும் இறையரசு பணிகளை ஆர்வமுடன் செய்யவும் வேண்டிய வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மைச் செயல்வீரராய் மாற்றும் அன்புத் தந்தையே! எம் இறைவா! இன்றைய உலகில் குழப்பங்களும் போராட்டங்களும், அமைதியின்மையும், சுயநலப் போக்குகளும் மலிந்தக் கிடக்கின்ற சூழலில் அமைதியின் தூதுவராய் எம் உலக அரசியல் தலைவர்கள் சமாதானப் போக்கைக் கையாண்டு மக்களுக்கு நன்மைகள் செய்து வளமான வாழ்வையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மைப் புதுபடைப்பாய் மாற்றும் எம் இறைவா! பணிவிடை பெறுவதற்கன்று பணிவிடை புரியவே வந்தேன் என்ற இயேசுவின் வார்த்தைகளை மனதில் கொண்டு எம் இளையோர் சிறந்த பணியாளராக உம் திருத்தூதர் தோமாவைப் போல் தன்னலமற்ற சேவையால் உலகமாந்தர்களை உம் பக்கம் ஈர்க்க வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment