கிறிஸ்து பிறப்புப் பெருவிழா - 25.12.2025
இன்றைய நாளில் நடைபெறும் மூன்று திருப்பலிகளுக்கான வாசகக்குறிப்புகள், முன்னுரைகள் மற்றும் மன்றாட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கவனமாக தேவையான திருப்பலிக்கானவற்றைத் தேர்வு செய்துக்கொள்ளவும்.
நல்லிரவு திருப்பலி
இன்றைய நற்செய்தி:
எசாயா 9:2-4, 6-7
தீத்து 2:11-14
லூக்கா 2:1-14
திருப்பலி முன்னுரை
மார்கழியில் பெற்றெடுத்த மனித நேயம், பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் இந்தக் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னிமரி வயிற்றில் மனுவுரு எடுத்த இறைவன், மீண்டும் ஒருமுறை மனிதருக்கு போதிக்க, புதுமைகள் புரிய, மண்ணகத்தை புண்ணிய பூமியாக மாற்ற நம்மிடையே மனிதராகப் பிறக்கிறார். இறைமகன் இயேசுவின் நோக்கம் அன்று எதுவாக இருந்ததோ, அதுவே இந்த நவீனக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இதைத்தான் விவிலியத்தில் வானதூதர்களின் வாய் வழியாக "உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக" என்று வாசிக்கிறோம்.
உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய அமைதியை உருவாக்கம் செய்வதுதான் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியாக உள்ளது. ஆகவே ஆண்டவரின் அமைதி, மகிழ்ச்சி, அருள் அவனியில் அபரிவிதமாக அருளப்பட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை: எசாயா 9:2-4, 6-7
இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் காண இறைவன் தரும் எல்லா நலன்களையும் எடுத்துரைக்கிறார். பேரொளியைக் காணச் செய்து மகிழ்ச்சியுறச் செய்தார், அவர்களை ஆட்சி செய்ய, வியத்தகு ஆலோசகர், அமைதியின் அரசரைக் கொடுத்து நீதியும் நேர்மையும் நிறைந்த ஆட்சியை உறுதிப்படுத்தினாரெனக் கூறும் வாசகத்திற்கு செவிமடுப்போம்
.
பதிலுரைப் பாடல்:
திபா 96: 1-2a. 2b-3. 11-12. 13 (பல்லவி: லூக் 2: 11)
பல்லவி: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா!
1. ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; -பல்லவி
2. அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி
3. விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். -பல்லவி
4. ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை: தீத்து 2:11-14
இன்றைய இரண்டாம் வாசகத்தில், நம்மைத் தேடிவந்த இயேசுவின் அருளால் நாம் இவ்வுலக வாழ்வின் நாட்டங்களிலிருந்து விடுபடவும் எல்லா நெறிகேடு களிலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்தி நம் அனைவரையும் தமக்குரியவராய் மாற்றவும் தம்மையே ஒப்படைத்த தியாகத்தை வியந்து கூறும் திருத்தூதர் பவுலடியாரின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:
பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் நமக்காகப் பிறந்திருக்கிறார்.
நற்செய்தி: லூக்கா 2:1-14
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன்” என்கிற எசாயாவின் இறைவாக்கு நிறைவேறிய இந்த இரவில், திருஅவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். மீட்பரின் வருகையை உலகுக்குப் பறைசாற்றும் விண்மீனாகவும் ஒளிச்சுடராகவும் எம்வாழ்க்கை அமைந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்” என்று உரக்கக் கூறும் இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, உலகனைத்திற்காகவும் மன்றாடுகிறோம். அமைதியின் அரசர் குழந்தையாய் பிறந்தபோது “உலகில் அமைதி உண்டாகுக!'' என வானதூதர்கள் எழுப்பிய வாழ்த்து, வையத்தில் அமைதியையும் நல்வாழ்வையும் கொணர வேண்டுமென்றும், அதற்காக எம்தலைவர்களும் நாங்களும் உழைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று இடையர்களுக்கு அருளப்பட்ட நற்செய்தியை நாங்களும் திறந்த மனதுடன் ஏற்று மன்றாடுகிறோம். எங்கள் பங்கையும், பங்குகுரு, ஏனைய குருக்கள், இந்தத் திருப்பலியை நிறைவேற்றும் குருக்கள், எங்கள் பங்கில் பணிபுரியும் துறவியர், கன்னியர் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பல்வேறு பக்தசபைகள், பாடகர் குழுக்கள், இன்னபிற இயக்கங்கள் அனைத்தையும், அதன் உறுப்பினர்களையும், அனைத்து இறைமக்களையும் நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. மார்கழிப்பனியில், மாடடைக் குடிலில் எளிய குழந்தையாய் பிறந்த இறைவா, உமது பிறப்பின் விழாவைக்கூட மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல் தவிக்கின்ற எளியவர்கள், அகதிகள், வீடற்றவர்கள், தனிமையில் தவிப்போர், முதுமையில் வாடுவோர், மற்றும் துயருறுவோர் அனைவரையும் உமது ஆறுதலின் அரவணைப்பில் வைத்துக் காத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்'' எனத் தங்களுக்கு அருளப்பட்ட அருங்குறியை அசட்டை செய்யாமல், மரிமகனை இறைமகனாய்ப் பார்த்துப் பரவசமடைந்த இடையர்களைப் போல, நற்கருணை எனும் திருவுணவில், மறைபொருளாய் மறைந்திருக்கும் உம்மைக்கண்டு, ஆராதிக்கிற உயர்விசுவாசத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
விடியற்காலத் திருப்பலி
இன்றைய வாசகங்கள்
I. எசாயா 62:11-12
II. தீத்து 3:4-7
III. லூக்கா 2:15-20
திருப்பலி முன்னுரை:
விடியற்காலையில் பனிகொட்டும் இவ்வேளையில் இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும்
மார்கழியில் பெற்றெடுத்த மனித நேயம், பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் இந்தக் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னிமரி வயிற்றில் மனுவுரு எடுத்த இறைவன், மீண்டும் ஒருமுறை மனிதருக்கு போதிக்க, புதுமைகள் புரிய, மண்ணகத்தை புண்ணிய பூமியாக மாற்ற நம்மிடையே மனிதராகப் பிறக்கிறார். இறைமகன் இயேசுவின் நோக்கம் அன்று எதுவாக இருந்ததோ, அதுவே இந்த நவீனக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இதைத்தான் விவிலியத்தில் வானதூதர்களின் வாய் வழியாக "உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக" என்று வாசிக்கிறோம்.
உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய அமைதியை உருவாக்கம் செய்வதுதான் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியாக உள்ளது. ஆகவே ஆண்டவரின் அமைதி, மகிழ்ச்சி, அருள் அவனியில் அபரிவிதமாக அருளப்பட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை:-
இன்றைய முதல் வாசகத்தில் எசாயா கடவுளின் அளவற்ற அன்பைப் பற்றிப் பெருமையுடன் மகிழ்ந்து அறிக்கையிடும் செய்திகளைக் காணலாம். ஆண்டவரின் வெற்றிப் பரிசாக மீட்பு வருகின்றது. நீயோ, தேடிக்கண்டுபிக்கப்பட்டவள் என்றும் இனி கைவிடப்படாத நகர் என்றுரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 97: 1,6. 11-12பல்லவி: பேரொளி இன்று நம்மேல் ஒளிரும்; ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்துள்ளார்.
இரண்டாம் வாசக முன்னுரை:தீத்து 3:4-7
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசு கொணர்ந்த புதுபிறப்பாலும் தூயஆவியாலும் நிறைவாய் அளிக்கவிருக்கும் நிலைவாழ்வை உரிமை பேறாகப் பெற்றுக் கொள்ளப்போவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா.
நற்செய்தி:லூக்கா 2:15-20
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன்” என்கிற எசாயாவின் இறைவாக்கு நிறைவேறிய இந்த இரவில், திருஅவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். மீட்பரின் வருகையை உலகுக்குப் பறைசாற்றும் விண்மீனாகவும் ஒளிச்சுடராகவும் எம்வாழ்க்கை அமைந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்” என்று உரக்கக் கூறும் இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, உலகனைத்திற்காகவும் மன்றாடுகிறோம். அமைதியின் அரசர் குழந்தையாய் பிறந்தபோது “உலகில் அமைதி உண்டாகுக!'' என வானதூதர்கள் எழுப்பிய வாழ்த்து, வையத்தில் அமைதியையும் நல்வாழ்வையும் கொணர வேண்டுமென்றும், அதற்காக எம்தலைவர்களும் நாங்களும் உழைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று இடையர்களுக்கு அருளப்பட்ட நற்செய்தியை நாங்களும் திறந்த மனதுடன் ஏற்று மன்றாடுகிறோம். எங்கள் பங்கையும், பங்குகுரு, ஏனைய குருக்கள், இந்தத் திருப்பலியை நிறைவேற்றும் குருக்கள், எங்கள் பங்கில் பணிபுரியும் துறவியர், கன்னியர் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பல்வேறு பக்தசபைகள், பாடகர் குழுக்கள், இன்னபிற இயக்கங்கள் அனைத்தையும், அதன் உறுப்பினர்களையும், அனைத்து இறைமக்களையும் நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. மார்கழிப்பனியில், மாடடைக் குடிலில் எளிய குழந்தையாய் பிறந்த இறைவா, உமது பிறப்பின் விழாவைக்கூட மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல் தவிக்கின்ற எளியவர்கள், அகதிகள், வீடற்றவர்கள், தனிமையில் தவிப்போர், முதுமையில் வாடுவோர், மற்றும் துயருறுவோர் அனைவரையும் உமது ஆறுதலின் அரவணைப்பில் வைத்துக் காத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்'' எனத் தங்களுக்கு அருளப்பட்ட அருங்குறியை அசட்டை செய்யாமல், மரிமகனை இறைமகனாய்ப் பார்த்துப் பரவசமடைந்த இடையர்களைப் போல, நற்கருணை எனும் திருவுணவில், மறைபொருளாய் மறைந்திருக்கும் உம்மைக்கண்டு, ஆராதிக்கிற உயர்விசுவாசத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பகல் திருப்பலி:-
இன்றைய வாசகங்கள்
I. எசாயா 52:7-10
II. எபிரேயர் 1:1-6
III.யோவான் 1:1-18
திருப்பலி முன்னுரை:
வாடைக்காற்று வீசும் இளம்காலை பொழுதில் இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!
மார்கழியில் பெற்றெடுத்த மனித நேயம், பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் இந்தக் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னிமரி வயிற்றில் மனுவுரு எடுத்த இறைவன், மீண்டும் ஒருமுறை மனிதருக்கு போதிக்க, புதுமைகள் புரிய, மண்ணகத்தை புண்ணிய பூமியாக மாற்ற நம்மிடையே மனிதராகப் பிறக்கிறார். இறைமகன் இயேசுவின் நோக்கம் அன்று எதுவாக இருந்ததோ, அதுவே இந்த நவீனக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இதைத்தான் விவிலியத்தில் வானதூதர்களின் வாய் வழியாக "உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக" என்று வாசிக்கிறோம்.
உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய அமைதியை உருவாக்கம் செய்வதுதான் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியாக உள்ளது. ஆகவே ஆண்டவரின் அமைதி, மகிழ்ச்சி, அருள் அவனியில் அபரிவிதமாக அருளப்பட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை: எசாயா 52:7-10
இன்றைய முதல் வாசகத்தில் எசாயா ஆண்டவரின் வாக்களித்த மீட்பு - மெசியா இவற்றைப் பற்றி பெரும் மகிழ்ச்சியுடன் செய்த பதிவுகளை காணலாம். ஆண்டவரின் செய்தியை அறிவிக்கவருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்தணை ஆழகாய் இருக்கின்றன என்று வருணிக்கும் எசாயா இடையர்களை எண்ணிதான் இப்படி சொல்லிருப்பரோ! ”ஆண்டவர் வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். பிறஇனத்தரும் இதை காண்பர்.” எசாயாவின் மசிழ்ச்சியை நாமும் நாம் உள்ளத்தில் பகிர்ந்துகொள்வோம்.
பதிலுரைப் பாடல்:
திபா 98: 1. 2-3a. 3cd-4. 5-6 (பல்லவி: 3b)
பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
1. ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி
2. ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி
3. உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி
4.யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை: எபிரேயர் 1:1-6
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசுவின் பெருமை அருமைகளை எடுத்துரைக்கின்றார். இறைவாக்கினர்கள் மூலம் பேசி வந்த கடவள் தன் மகன் மூலம் நம்மிடம் பேசியுள்ளதையும், அவர் தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். வானத்தூதர்களை விட மேன்மையானவர். என்று அவரின் மாட்சிமையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:
அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே, வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.
நற்செய்தி:யோவான்: 1:1-18
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன்” என்கிற எசாயாவின் இறைவாக்கு நிறைவேறிய இந்த இரவில், திருஅவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். மீட்பரின் வருகையை உலகுக்குப் பறைசாற்றும் விண்மீனாகவும் ஒளிச்சுடராகவும் எம்வாழ்க்கை அமைந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்” என்று உரக்கக் கூறும் இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, உலகனைத்திற்காகவும் மன்றாடுகிறோம். அமைதியின் அரசர் குழந்தையாய் பிறந்தபோது “உலகில் அமைதி உண்டாகுக!'' என வானதூதர்கள் எழுப்பிய வாழ்த்து, வையத்தில் அமைதியையும் நல்வாழ்வையும் கொணர வேண்டுமென்றும், அதற்காக எம்தலைவர்களும் நாங்களும் உழைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று இடையர்களுக்கு அருளப்பட்ட நற்செய்தியை நாங்களும் திறந்த மனதுடன் ஏற்று மன்றாடுகிறோம். எங்கள் பங்கையும், பங்குகுரு, ஏனைய குருக்கள், இந்தத் திருப்பலியை நிறைவேற்றும் குருக்கள், எங்கள் பங்கில் பணிபுரியும் துறவியர், கன்னியர் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பல்வேறு பக்தசபைகள், பாடகர் குழுக்கள், இன்னபிற இயக்கங்கள் அனைத்தையும், அதன் உறுப்பினர்களையும், அனைத்து இறைமக்களையும் நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. மார்கழிப்பனியில், மாடடைக் குடிலில் எளிய குழந்தையாய் பிறந்த இறைவா, உமது பிறப்பின் விழாவைக்கூட மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல் தவிக்கின்ற எளியவர்கள், அகதிகள், வீடற்றவர்கள், தனிமையில் தவிப்போர், முதுமையில் வாடுவோர், மற்றும் துயருறுவோர் அனைவரையும் உமது ஆறுதலின் அரவணைப்பில் வைத்துக் காத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்'' எனத் தங்களுக்கு அருளப்பட்ட அருங்குறியை அசட்டை செய்யாமல், மரிமகனை இறைமகனாய்ப் பார்த்துப் பரவசமடைந்த இடையர்களைப் போல, நற்கருணை எனும் திருவுணவில், மறைபொருளாய் மறைந்திருக்கும் உம்மைக்கண்டு, ஆராதிக்கிற உயர்விசுவாசத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறவாமல் அன்பின் மடலின் கிறிஸ்மஸ் மலரை பார்வையிட அன்புடன் அழைக்கிறோம்.
அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துகள்!

No comments:
Post a Comment