ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு
இன்றைய வாசகங்கள்
1. தொடக்க நூல் 2:18-24
2. எபிரேயர் 2:9-11
3.மாற்கு 10: 2-16
திருப்பலி முன்னுரை:
இயேசுகிறிஸ்துவின் அருமையான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரையும் ஆண்டின் 27ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ அன்புடன் அழைக்கின்றோம். திருமணம் என்னும் திருவருட்சாதனத்தைப் பற்றி இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்த வாழ்வதைச் சமூகம் அங்கீகரிக்கும்போது திருமணம். அதே திருமணம்
திருச்சபை அங்கீகரிக்கும்போது அது திருவருட்சாதனம். குடும்பம் என்னும் குட்டித் திருச்சபை நலமாக இருந்தால் தான் உலகம் நன்றாக இருக்கும்.
கணவன் மனைவி இவர்களிடையே நிலவும் சமத்துவம் அன்பின் சின்னங்கள்.இறைமகன் இயேச அழகாக தெளிவாக வலியுறுத்துவதும் இதுவே. கடவுள் இணைத்தை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்ற வார்த்தை தான். எனவே நாம் திருமணத்தில் நம் அழைப்பை ஏற்றுக்கொண்டு இறுதிவரை பிரமாணிக்கத்துடன்வாழவும், சம் குடும்பங்கள்
திருக்குடும்பங்களாக திகழந்திட மாக அனைவரும் ஒருமனத்தவராய் திருப்பலியில் இணைந்திடுவோம்.
வாசக முன்னுரை:
முதல் வாசக முன்னுரை
முதல் வாசகத்தில் கடவுள் முதல் படைப்பு நிகழ்வில் மனிதர்களை ஆணும், பெண்ணுமாக கடவுள் தன் சாயலில் படைக்கின்றார். இரண்டாம் நிகழ்வில் முதலில் ஆணும்(ஆதாமும்) இரண்டாவதாக பெண்ணும் (ஏவாளும்)
படைக்கப்படுகின்றனர். திருமண உறவு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடப்பது என்றும், இது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட உறவு என்றும், இந்த உறவில் இறைவனே சான்றாக இருக்கின்றார் என்றும், இந்த உறவினால் ஆண்-பெண் உறவிலே பெரிய மாற்றம் இருக்கிறது என்றும் முன்வைக்கிறது தொடக்க நூல்.இதனை கவனமுடன் வாசிக்க கேட்போம்
பதிலுரைப் பாடல்
திபா 128: 1-2. 3. 4-5. 6
பல்லவி: உம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!
1.ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி
2.உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி
3.ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி
4.நீர் உம் பிள்ளைகளின் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக! பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
இரண்டாம் வாசகத்தில் 'கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார்.' ஆக, படைப்பு அனைத்தும் கடவுளுக்காக அவரின் திருவுளம் நிறைவேற்றுவதற்காகப் படைக்கப்பட்டது. படைப்புப் பொருளான மனிதர் மற்றவர்கள்மேல் ஆட்சி செலுத்த அல்லது அடிமைப்படுத்த அவர்களுக்கு உரிமை இல்லை. 'துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார்.' துன்பம் என்பது மனித குலத்தின் குறை அல்லது பலவீனம் அல்ல. இந்த உணர்வைத்தான் கடவுளின் மகனும் தன்மேல் சுமந்து கொண்டார். இந்த துன்பம் என்ற உணர்வைத்தான் இயேசு மீட்பு கொண்டுவரும் வழியாகப் பயன்படுத்திக் கொண்டார். இக்கருத்துக்களை புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தை வாசிக்க கேட்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு:
1.எம் அன்பு தந்தையாம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப, திருஅவையை வழிநடத்தவும், திருச்சபை நிறுவன திருச்சபையாக அல்லாமல் பணி வாழ்வே திருச்சபையின் மையம் என்னும் மனநிலை திருச்சபையில் மலர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2.இன்றைய சமூகத்தில் காணப்படும் சாதி, மதம், இனம், மொழி வேறுப்பாடு, சுயநலம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் திருச்சபையில் மறைந்து, பரந்த உண்மையான கிறிஸ்து இயேசுவின் மனநிலை எல்லோரிலும் மலர, ஏழைகளின் வாழ்வு மலர, திருச்சபையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி பல முன்னேற்ற பாதையில் மக்களை வழி நடத்த வேண்டுமென ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
3.அன்பு தந்தையே இறைவா! இன்றைய நற்செய்தியின் மையமாய் அமைந்துள்ள குடும்ப வாழ்வும், வ்வாழ்விற்கு, மையமாய் விளங்கும் பெற்றோர்களை பேணி பாதுகாத்து, மறந்தபோன இன்றைய மனிதவாழ்வு திருமணத்தின் புனிதத் தன்மையும் குடும்ப வாழ்வின் மையத்தையும் உணர்ந்தவர்களாக, தொடக்கக்கால கிறிஸ்தவர்களிடத்தில் இருந்த ஒன்றிப்பும் வார்த்தை வழிபாடும், இன்று நம் அனைவரிலும் புதுப்பிக்க தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4.எங்கள் அன்பு தந்தையே இறைவா! உலகில் நடைபெறும் பயங்கரவாதம் இனவாதம், பருவநிலைமாற்றங்கள், அதனால் ஏற்படும் இயற்கை அழிவுகள் இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் தவறுகள் இவை அனைத்தும் உமது இறை இரக்கத்தினால் மாற்றம் பெற்று, படைப்பின் மேன்மையை மனிதன் உணர்ந்து மனித வாழ்வு மேம்பட உமது அருளை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5.அனைவரையும் பேணிக் காக்கும் எம் இறைவா! பதினைந்து வயதில் இறைபணிக்காக தங்களை அர்ப்பணிக்கும் இறைபணியாளர்களின் முதிய பருவத்தில் தகுந்த பாதுகாப்பும், அன்பும், அரவணைப்பும், பராமரிப்பும், நல்ல ஆரோக்கியமும் கிடைத்திட தேவையான அருளை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment